17 Nov 2026

கடையில் வாங்கும் நெய் ஒரிஜினலா? கண்டுபிடிப்பது எப்படி?

Credit: Freepik

ஆர்கானிக் நெய் என்பது இயற்கை விவசாய முறையில் வளர்க்கப்படும் கால்நடைகளிடமிருந்து பெறப்படும் பாலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.

ஆர்கானிக்

காங்கேயம், கிர், சாஹிவால், உம்பளச்சேரி போன்ற பாரம்பரிய நாட்டு மாட்டினங்களின் பாலிலிருந்து நாட்டு மாட்டு நெய் தயாரிக்கப்படுகிறது.

நாட்டு மாடு

2 அல்லது அதற்கு மேற்பட்ட மாட்டினங்களின் மரபியல் பண்புகளைக் கொண்ட மாடுகளிலிருந்து பெறப்படும் பாலைப் பயன்படுத்தியும் நெய் தயாரிக்கப்படுகிறது.

கலப்பினம்

மாட்டின் உணவு மற்றும் பாலின் தன்மையைப் பொறுத்து நிறம் மாறுவதால், அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மட்டுமே அது சுத்தமானது என்று முடிவு செய்யக்கூடாது.

நிறம்

தரமான நெய்யில் இயல்பான பால் கொழுப்பின் இனிமையான மணம் இருக்கும். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் நெய்யில் லேசான வறுத்த பருப்பு போன்ற மணமும் வீசலாம்.

மணம்

சுத்தமான நெய்யில் இயல்பான பால் கொழுப்பின் சுவையும், தயாரிப்பு முறையைப் பொறுத்து லேசான வறுத்த சுவையும் இருக்கும்.

சுவை

சில நெய்களில் சிறிய துகள்கள் போன்ற அமைப்புகளும் காணப்படலாம்; இவை தயாரிப்பு முறை மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடும்.

பதம்

நெய் வாங்கும்போது அதன் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதி மற்றும் உற்பத்தியாளர் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

காலாவதி தேதி

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நெய்யில் உரிய FSSAI உரிமம் அல்லது பதிவு விவரங்கள் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

உரிமம்

நெய்யைச் சூடுபடுத்துவது, குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதன்மூலம், அதன் தூய்மையை அறியலாம்.

கலப்படம்