29 Jun 2025
Credit: GETTY
கண்களின் அழகை மேம்படுத்த கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் ஐ-லைனர் வைப்பதற்கு அதிக நேரம் ஒதுக்குகிறார்கள். அது சில மணிநேரத்தில் கலைந்துவிடும்.
ஐ-லைனர் சீக்கிரமே கலைந்துபோவதற்கு நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களின் தரம் மட்டுமே முழுமையான காரணம் அல்ல.
தினசரி மேக்கப் போடும் முறையில் செய்யும் சில எளிய மாற்றங்கள் ஐ-லைனரை நாள் முழுவதும் கலையாமல் வைக்க உதவும்.
சரும வறட்சியைத் தடுக்க மாய்ஸ்சுரைசர் அவசியம்தான் என்றாலும், அதனை கண் இமைகளின் மீது தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி முகம் கழுவுபவர்கள் மற்றும் வெயிலில் செல்பவர்களுக்குச் சாதாரண ஐ-லைனர் எளிதில் மங்கிப் போய்விடும்.
ஐ-லைனர் வைப்பதற்கு முன்பாகவே கண் இமைகளில் லேசாகப் பவுடர் தடவிக் கொள்வது எண்ணெய் பசையை உறிஞ்சும்.
இமைகளின் மேல் சிறிதளவு ஐ பிரைமரைத் தடவி, அது நன்கு காய்ந்த பிறகு ஐ-லைனர் வைத்தால் நல்ல பிடிமானம் கிடைக்கும்.
ஐ-லைனர் வைத்தவுடன் அதே நிறத்திலான ஐஷேடோவை ஒரு சிறிய பிரஷ் மூலம் அதன் மேல் லேசாகத் தட்டி விட வேண்டும்.
கண் ஒப்பனையை முழுமையடையச் செய்வதிலும், அதனை நீண்ட நேரம் அப்படியே தக்க வைப்பதிலும் கன்சீலருக்கு முக்கியப் பங்குண்டு.
மேற்கூறிய எளிய அழகுக்கலை நிபுணர்களின் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் ஐ-லைனர் நாள் முழுவதும் கலையாமல் அப்படியே இருக்கும்.