31 July 2026

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பிரீத்தி முகுந்தன்.. இந்த படமா?

Credit: Instagram

தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் இளம் நாயகியாக கலக்கி வருபவர் பிரீத்தி முகுந்தன்.

நடிகை பிரீத்தி முகுந்தன் கடந்த 2001ம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர் இவர்.

தனது கல்லூரியில் படிப்பின்போதே மாடலிங்கில் இறங்கிய பிரீத்தி முகுந்தன், பின் நடிப்பிலும் ஆர்வம் கொண்டார்.

2024ல் சாய் அபயங்காரின் இசையில் ஆச கூட என்ற பாடலில் நடனமாடி பிரபலமானார்.

இவர் தமிழ் நடிகையாக இருந்தாலும், ஓம் பீம் புஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாகவே நாயகியாக அறிமுகமானார்.

பின் தமிழில் கவினுக்கு ஜோடியாக ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழில் நுழைந்தார். 

இதற்கு பின் தமிழில் இவர் நடித்திருந்த படம்தான் பிளாஸ்ட் மற்றும் இதயம் முரளி.

இயக்குநர் சுரேஷ் கே ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான பிளாஸ்ட படத்தில் அதிரடி நாயகியாக நடித்திருந்தார். 

மேலும் இவர் தனுஷ் நடிக்கவுள்ள D56 படத்திலும் அவருக்கு ஜோடியாகவுள்ளாராம். 

தென்னிந்திய மொழியில் நடித்துவந்த இவர், பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக நாகஜில்லா என்ற படத்தில் நடித்துவருகிறார்.