07 July 2026

அந்த நடிகர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - பிரீத்தி முகுந்தன்!

Credit: Instagram

தென்னிந்திய மொழிகளில் இளம் கதாநாயகியாக நடித்து பிரபலமாகிவருபவர் பிரீத்தி முகுந்தன். 

இவர் தமிழில் இறுதியாக அர்ஜுனின் மகளாக பிளாஸ்ட் (2026) என்ற படத்தில், பிளாஸ்ட்டாக நடித்திருந்தார். 

இந்த படமானது தமிழில் இவருக்கு அதிகம் வரவேற்பை கொடுத்த ஆக்ஷன்  படமாக அமைந்துள்ளது. 

நடிகை பிரீத்தி முகுந்தன், சாய் அபயங்கரின் ஆல்பம் பாடலான ஆச கூட என்ற பாடலில் நடனமாடி மக்களிடையே பிரபலமானவர். 

இதற்கு பின் தெலுங்கில் ஓம் பீம் புஷ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். 

இந்த வரிசையில் தமிழில் இவருக்கு அறிமுக படமாக அமைந்தது ஸ்டார் (2024). இதில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

இப்படத்திற்கு பின் டியூட் பட நடிகர் ஹிருதுவுக்கு ஜோடியாக, மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் நுழைந்தார். 

இவ்வாறு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் இளம் கதாநாயகியாக ஹிட் கொடுத்துவருகிறார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், பிளாஸ்ட் படத்தில் ஆக்ஷன் காட்சியில் நடிக்க, எந்த நடிகர் உத்வேகமாக நினைத்தார் என தெரிவித்துள்ளார். 

நடிகை பிரீத்தி முகுந்தன், நடிகரும், முதல்வருமான விஜயை இன்ஸ்பிரேஷனாக நினைத்து பிளாஸ்ட் படத்தில் நடித்ததாக தெரிவித்துள்ளார்