16 July 2026
Credit: Instagram
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் இளம் நடிகையாக இருப்பவர் பிரீத்தி முகுந்தன்.
இவர் தமிழில் ஆரம்பத்தில் தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
பின் 2024ம் ஆண்டில் ஆச கூட என்ற ஆல்பம் பாடல் மூலம் மிகவும் பிரபலமானார்.
சினிமாவில் நடிகையாகவேண்டும் என எண்ணிய பிரீத்தி முகுந்தன், ஓம் பீம் புஷ் என்ற தெலுங்கு படத்தில் நடிகையானார்.
அந்த விதத்தில், 2024ல் தமிழில் கவினின் ஸ்டார் படத்தில் நாயகியாக நுழைந்தார்.
இதன் பிறகு மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் மட்டும் பிளாஸ்ட் மற்றும் இதயம் முரளி என இரு படங்கள் வெளியாகியிருக்கிறது.
இதில் அதிரடி ஆக்ஷன் மற்றும் பெண்ணியம் சார்ந்த கதையில் அவர் நடித்து ஹிட் கொடுத்த படம் பிளாஸ்ட்..
ஒவ்வொரு பெண்ணுக்கும் வருங்கால துணையை பற்றிய எதிர்பார்ப்பு போல, பிரீத்தி முகுந்தன் அவரின் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளார்.
பிரீத்தி முகுந்தன், தனது வருங்கால கணவர், தன்மீது அக்கறையானவராகவும், உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்