Credit: Instagram
14 November 2026
Credit: Instagram
தமிழ் சினிமாவில் இயக்குநராக படத்தை இயக்கி, பின் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரதீப் ரங்கநாதன்.
இவர் கடந்த 2019ம் ஆண்டில் நடிகர் ரவி மோகன் மற்றும் காஜல் அகர்வால் நடித்திருந்த கோமாளி என்ற படத்தை இயக்கி சினிமாவில் நுழைந்தார்.
இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஜோசப் என்ற கேமியோ வேடத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்து கலக்கியிருந்தார்.
இதன் பிறகு 2022ம் ஆண்டில் லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றியாக அமைந்தது.
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்க ஆரம்பித்த நிலையில், இதுவரை மொத்தம் 4 படங்கள் வெளியாகியுள்ளது.
அதில் இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்திருந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை.
இதற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்குநர், நடிகர் என்ற பணிகளை கடந்து தற்போது தயாரிப்பாளராக படத்தை தயாரிக்கிறார்.
இவர் தயாரிக்கும் முதல் படத்தில் மமிதா பைஜூ, ஸ்வாசிகா மற்றும் அஸ்வத் மாரிமுத்து இணைந்து நடிக்க, 6 இயக்குநர்கள் இயக்குகிறார்கள்.
இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு முக்கியமான வேடத்தில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த விதத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது 5வது படத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைகிறாராம். ஆனால் இயக்குநர் யார் என இன்னும் உறுதியாகவில்லை.