02 OCT 2026

சுறுசுறுப்பு தரும் பானங்கள் மனச்சோர்வை உண்டாக்குமா?

Credit:Unsplash

22 நாடுகளின் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த மனநல ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு

 இனிப்பூட்டப்பட்ட அல்லது செயற்கை சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள் மனச்சோர்வு அபாயத்தை 18 சதவீதம் வரை உயர்த்துகின்றன.

இனிப்புகள்

சர்க்கரை சேர்க்கப்படாத மிதமான காபி அருந்துவது மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பை 13 சதவீதம் வரை குறைக்கிறது.

காபி

தினமும் மிதமான அளவில் காபி பருகும் பெண்களுக்கு மனச்சோர்வு அபாயம் 20 சதவீதம் வரை குறைகிறது.

பெண்கள்

காஃபின் மூளையில் உள்ள 'அடீனோசின்' வேதிப்பொருளைத் தடுத்து, மகிழ்ச்சி தரும் டொபமைன் மற்றும் செரடோனின் சுரப்பை தூண்டுகிறது.

ஹார்மோன்

 காபியிலுள்ள 'குளோரோஜெனிக் அமிலம்' மூளையில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து மனநலனைப் பாதுகாக்கிறது.

ஆக்ஸிடன்ட்

அதிகச் சர்க்கரை பயன்பாடு உடலின் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 'கார்டிசால்' ஹார்மோன் சுழற்சியைப் பாதித்து படபடப்பை ஏற்படுத்துகிறது.

சர்க்கரை

சர்க்கரை பானங்களால் ரத்தச் சர்க்கரை சட்டெனக் குறைந்து, நரம்புகளைப் பராமரிக்கும் 'BDNF' புரதத்தின் அளவை வீழ்ச்சியடையச் செய்கிறது.

புரதம்

'சுகர் ஃப்ரீ' எனப்படும் செயற்கை இனிப்பு பானங்கள் மனச்சோர்வு அபாயத்தை 30 சதவீதம் வரை உயர்த்துகின்றன.

சுகர் ஃப்ரீ

பபுள் டீ மற்றும் ஆற்றல் பானங்கள் மனச்சோர்வு மற்றும் மனப்பதற்றத்தை இருமடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கச் செய்கின்றன.

மனச்சோர்வு