30 August 2026

ஜெயிலர் 2 அலா பொலேலோ பாடலில் நடனமாட பூர்ணா வாங்கிய சம்பளம்?

Credit: Instagram

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து கவர்ந்துவருபவர் பூர்ணா.

சினிமாவில் பூர்ணா என்று அழைக்கப்பட்டுவரும் இவரின் உண்மையான பெயர் ஷாம்னா காசிம். மேடை பெயராக பூர்ணா என்று அழைக்கப்படுகிறார்.

கடந்த 2004ம் ஆண்டில் இயக்குநர் கலாவூர் ரவிக்குமாரின் இயக்கத்தில், மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

இதன் பிறகு தொடர்ந்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக மலையாளம் சினிமாவில் படங்களில் சிறப்பாக நடித்துவந்தார்.

பின், 2007ம் ஆண்டில் ஸ்ரீ மஹாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார். இவருக்கு இது நல்ல வரவேற்பை கொடுத்தது.

தமிழில் திருமுருகன் இயக்கத்தில், பரத்துக்கு ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் ஹீரோயினாக நுழைந்தார்.

இதன் பிறகு தமிழில், கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, ஆடுபுலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட பூர்ணா, சிறப்பு வேடங்களிலும் சிறு சிறு வேடங்களிலும் நடித்தார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில், அலா பொலேலோ என்ற பாடலில் நடனமாடினார். இதன் மூலமாக ரசிகர்களை கவர்ந்தார்.

அலா பொலேலோ பாடலுக்கு நடனமாடுவதற்கு நடிகை பூர்ணா, கிட்டத்தட்ட ரூ 50 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.