Credit: Instagram

13 october 2026

பூஜா ஹெக்டேவின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

Credit: Instagram

பான் இந்திய மொழிகள் சினிமாவில் முன்னணி ஸ்டார் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி சினிமாவில் உருவாகும் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

சினிமாவிற்கு முந்தைய காலங்களில் விளம்பரம் மற்றும் அழகி போட்டிகளில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த வகையில் பூஜா ஹெக்டேவுக்கு சினிமாவில் ஒரு நடிகை என முதல் அறிமுகத்தை கொடுத்தது தமிழ் சினிமா திரைப்படம்தான்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்திலும், ஜீவாவின் நடிப்பிலும் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நுழைந்தார்.

இதற்கு பிறகு தெலுங்கு சினிமாவின் பக்கம் சென்ற நிலையில், பல பேக் டூ பேக் ஹிட் திரைப்படங்கள் அமைந்தது.

இதன் பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய் நடித்திருந்த பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.

இதன் பிறகு தமிழில் சூர்யாவின் ரெட்ரோ மற்றும் முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் போன்ற படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பின் தனது கைவசத்தில் ஸ்ரீ ஸ்ரீ மற்றும் காஞ்சனா 4 போன்ற படங்களில் பணியாற்றுகிறார். இவர் ஒருபடத்தில் பணியாற்ற எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

நடிகை பூஜா ஹெக்டே ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ரூ 4 கோடி முதல் ரூ 6 கோடிகள் வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது.