19 Jan 2025

பிரபல ஹீரோ என்னை தொட முயன்றார் - பூஜா ஹெக்டே அதிர்ச்சி தகவல்

Credit: Instagram

இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் முகமூடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே.

அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றிபெறாததால், தெலுங்கு ஹிந்தி மொழிகளில் கவனம் செலுத்தினார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான அல வைக்குந்தபுரமுலோ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. 

இதனையடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின். தமிழில் தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். 

தற்போது விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்துள்ளார். 

பிரபல நடிகைகள் தனது படங்களில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே பான் இந்திய படத்தில் பிரபல ஹீரோ தவறாக நடந்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் பான் இந்திய படத்தில் ஒரு ஸ்டார் ஹீரோ அனுமதியின்றி கேரவனில் நுழைந்தார். 

என்னைத் தொட முயன்றார், உடனடியாக அவரது கண்ணத்தில் அறைந்தேன் என்றார். 

அதன் பிறகு அந்த ஹீரோ என்னுடன் பணியாற்றவில்லை என்றார்.