31 AUG 2026

இனி நெட்வொர்க் இல்லாமல் பணம் அனுப்பலாம் : போன்பே அசத்தல்!

Credit: GETTY

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்தி தான் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். 

டிஜிட்டல் பரிவர்த்தனை

இதற்காக கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பேமெண்ட் செயலிகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி ஒரே கிளிக்கில் ஒருவருக்கு பணம் அனுப்ப முடியும்.

செயலிகள்

என்னதான் ஒரே கிளிக்கில் பணம் அனுப்ப முடியும் என்றாலும் இந்த செயலிகளில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது, இந்த செயலிகள் மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு நெட்வொர்க் வசதி அவசியம்.

நெட்வொர்க்

இந்த நிலையில் தான், இந்திய பொதுமக்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றான போன்பே அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

போன்பே

அதாவது அனைத்து டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளிலும் பணம் அனுப்ப நெட்வொர்க் கட்டாயமாக உள்ள நிலையில், இனி போன்பேவில் நெட்வொர்க் இல்லாமலே பணம் அனுப்பலாம். 

நோ நெட்வொர்க்

போன்பே யுபிஐ 123பே என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நெட்வொர்க் இல்லாமலும், ஸ்மார்ட்போன் இல்லாமலும் கூட பணம் அனுப்ப முடியும்.

123 யுபிஐ பே

நோக்கிய, எச்எம்டி, லாவா, ஐடெல் உள்ளிட்ட போனளில் இந்த அம்சம் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. 

நிறுவனங்கள்

இனி வரும் காலங்களில் இந்த போன் நிறுவனங்கள் மட்டுமன்றி, மேலும் சில நிறுவனங்கள் இணைய வாய்ப்பு உள்ளதாக போன்பே கூறியுள்ளது. 

கூடுதல் நிறுவனங்கள்

இது எஸ்எம்எஸ்-ஐ மையப்படுத்திய ஒரு அம்சமாகும். இதன் மூலம் 2ஜி இணைய சேவைகள் உள்ள இடத்திலும் கூட பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

எஸ்எம்எஸ்

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது மொபைல் எண் அல்லது யுபிஐ ஐடி மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் எண்