13 Jan 2026

மரியான் படத்தில் நடந்த மோசமான அனுபவம் - நடிகை பார்வதி வேதனை

Credit: Social Media

சசி இயக்கிய பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி.

நயன்தாராவைப் போல நடிக்க வருவதற்கு முன் கிரண் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார்.

பூ திரைப்படம் இவருக்கு தமிழில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

தமிழில் சென்னையில் ஒருநாள், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடித்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் தேசிய விருது பெற்றது.

கடைசியாக பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மரியான் படத்தில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

'மரியானில் நீரில் நனைந்தபடி நடித்தேன். மாற்று உடைகள் கொண்டுவரவில்லை'

'உடை மாற்ற ஹோட்டலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை, பீரியட் என சொல்லியும் விடவில்லை' என்றார்.

தனுஷ் உடனான காப்பிரைட் பிரச்னையில் பார்வதி நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.