21 Jun 2025

சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் ஆலிவ் ஆயில்..!

Credit: Freepik

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது சருமத்திற்கும் கூந்தலுக்கும் பல வழிகளில் நன்மை தரும்.

நன்மை

ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும்.

மென்மை

சருமத்தில் இந்த ஆலிவ் எண்ணெயை அளவோடு பயன்படுத்துவது இயற்கையான பொலிவை கொடுக்கும்.

பொலிவு

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் பாலிஃபீனால்கள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சரும பாதிப்பை குறைக்கும்.

வைட்டமின் ஈ

குளிர்காலத்தில் வறண்ட சரும பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு, ஆலிவ் எண்ணெய் வெடிப்புகள் ஏற்படாமல் வைக்கும்.

வெடிப்புகள்

தலைமுடிக்கு ஆலிவ் எண்ணெய் தடவுவது, அதை மென்மையாக்குவதோடு சிக்கல்களை குறைக்கும்.

சிக்கல்

வறண்ட, சிக்கு படிந்த கூந்தலை மென்மையாக்கவும், சிக்கு ஏற்படுவதையும் ஆலிவ் எண்ணெய் குறைக்கும்.

சிக்கு

ஆலிவ் எண்ணெய் தலைமுடிக்கு ஈரப்பதம் அளிப்பது, முடி உடைவதை குறைத்து ஆரோக்கியமாக வைக்கும்.

தலைமுடி

ஆலிவ் எண்ணெயை கொண்டு தலையை மசாஜ் செய்வது உச்சந்தலையின் ஏற்படும் வறட்சியை குறைக்கும்.

உச்சந்தலை

ஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின்களும் ஆரோக்கியமான கொழுப்புகளும் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

சருமம்