Credit: Instagram
24 September 2026
Credit: Instagram
தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துவருபவர் நிவின் பாலி.
மலையாளம் சினிமாவில் நாயகனாக நுழைந்து, தற்போது தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார்.
நடிகர் நிவின் பாலி, கடந்த 2010ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக நுழைந்தார்.
இந்த படத்திற்கு பின் தொடர்ந்து மலையாளம் சினிமாவில் முக்கிய வேடங்கள் மற்றும் நாயகனகாவே படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார்.
இந்த வரிசையில் தமிழில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்ததுதான் நேரம். இதை இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார்.
இதையடுத்து இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியிருந்தது. இதன் மூலம் ரசிகர்களும் அதிகமாகினர்.
மேலும் தென்னிந்திய முழுவதும் இவருக்கு பிரபலத்தை வாங்கிக்கொடுத்த திரைப்படம் பிரேமம். இது 2015ல் வெளியானது.
இதன் பிறகு பல படங்களில் நடித்தார். தற்போது இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் புது படம்தான் ஏழு கடல் ஏழு மலை.
இது அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகும் நிலையில், சமீபத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அதில் தனது கம்பேக் பற்றி நிவின் தெரிவித்துள்ளார்.
அதில் நிவின் பாலி, இப்போது என் பெயரே 'நிவின் பாலி கம்பேக்' ஆகிவிட்டது. என்னுடைய ஒவ்வொரு படமும் ஒரு கம்பேக்தான்.. இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கே ஒரு கம்பேக்.