0 Jan 2026
Credit: Social Media
மலையாள திரையுலகில் சிறந்த நடிகையாக அறியப்படுபவர் நிமிஷா விஜயன்
முதல் படத்திலேயே சிறப்பான நடிகை என பெயர் பெற்றார்.
குறிப்பாக தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் சராசரி குடும்ப பெண்களின் நிலையை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார்.
தொடரந்து நயட்டு, மாலிக், ஒரு தெக்கன் தள்ளு கேஸ் என அவரது நடிப்பில் சிறந்த படங்கள் வெளியாகின.
இந்த நிலையில் சித்தா படத்தின் மூலம் இவருக்கு தமிழில் நல்ல அறிமுகம் கிடைத்தது.
தொடர்ந்து மிஷன் சாப்டர் 1, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.
கடைசியாக அதர்வாவுடன் இவர் நடித்த டிஎன்ஏ திரைப்படம் நல்ல வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில், நல்ல விமர்சனங்கள் இருந்தால் ஏற்றுக்கொள்வேன் என்றார்.
ஆனால் விமர்சனங்கள் தவறாக இருந்தால் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்.