26 Dec 2025
Credit: Social Media
தமிழில் சிலம்பரசனுக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்தின் அறிமுகமானவர் நிதி அகர்வால்.
இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர்.
முன்னா மைக்கேல் என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ஜெயம் ரவியுடன் பூமி, உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஹர ஹர வீர மல்லு படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பிரபாஸிற்கு ஜோடியாக தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தி ராஜா சாப் படத்தின் பாடல் வெளியீடு ஹைதராபாத்தில் உள்ள மாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி முடிந்து அவர் வெளியேறும்போது ரசிகர்கள் மத்தியில் சிக்கி கொண்டார்.
இந்த நிலையில் நடிகைகளின் உடை குறித்து பிரபல தெலுங்கு நடிகர் கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்த நிதி அகர்வால் பாதிக்கப்பட்டவரையே குறை கூறுவதா என வருத்தம் தெரிவித்துள்ளார்.