16 SEP 2026
Credit: Getty
உலகை செயற்கை நுண்ணறிவு அம்சம் மற்றும் ரோபோடிக் அம்சம் ஆட்டி படைத்து வருகிறது. இந்த நிலையில், சீனா ஒரு அதிரடி செயலை செய்துள்ளது.
அதாவது இதுவரை மனித விஞ்ஞானிகள் ரோபோக்களை உருவாக்கி வந்த நிலையில், ரோபோக்களே ரோபோக்களை உருவாக்கும் ஆலையை உருவாக்கியுள்ளது.
இந்த ஆலையில், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரோபோக்கள் ஒரு புதிய ரோபோவை உருவாக்கும்.
இந்த ஆலையில், ஏற்கனவே செய்யப்பட்ட ரோபோக்களின் பாகங்களை மற்ற ரோபோக்கள் வெறும் 10 நிமிடங்களில் பொருத்தும்.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 10,000 மனித ரோபோக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
ரோபோக்களின் பாகங்களை இணைத்து அவற்றுக்கு முழு உருவம் கொடுக்க சில மணி நேரங்கள் ஆகும் நிலையில், இந்த ரோபோக்கள் அதனை விரைவாக செய்ய உள்ளன.
இந்த ரோபோக்கள் தனியாக இந்த வேலைகளை செய்யப்போவதில்லை என்றும், அவற்றுக்கு சில தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மனித தலையிடல் இல்லாமல் முற்றிலும் ரோபோக்களே, புதிய ரோபோக்களை உருவாக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு தயாரிக்கப்படும் ரோபோக்கள் ஆலையை விட்டு வெளியேறும்போது அவற்றுக்கான முறையான பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
ரோபோக்களுக்கான இந்த இறுதி பரிசோதனையை மனிதர்கள் மேற்கொள்ள உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.