27 AUG 2026

வாட்ஸ்அப்பில்  வந்த சூப்பர் பாதுகாப்பு அம்சம் : என்ன தெரியுமா?

Credit: GETTY

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்களது தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். 

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியை பலரும் தங்களது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த சேவைகளுக்காக அதிகம் பயன்படுத்தும் நிலையில், அதில் மோசடிகளும் நடைபெறுகின்றன.

மோசடிகள்

சில சமயங்களில் வாட்ஸ்அப்பில் மோசடிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக பயனர்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர். 

சிரமங்கள்

இவ்வாறு பயனர்கள் தொடர் சிக்கல்களை எதிர்க்கொள்ளும் நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் மெட்டா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நடவடிக்கை

வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக்கர்களிடம் இருந்து காப்பது, ஆன்லைன் மோசடிகளில் இருந்து பயனர்களை காப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு

இதுவரை வாட்ஸ்அப்பில் Two Step Verification என்ற இரண்டு முறை சரிபார்ப்பு இருந்தது. இதில் 6 இலக்க எண்கள் கொண்ட பின் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

6 இலக்க எண்கள்

ஆனால், இந்த எண்களை ஹேக்கர்கள் மிக எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் இருப்பதால் அதில் வாட்ஸ்அப் தற்போது மாற்றம் மேற்கொண்டுள்ளது. 

முக்கிய மாற்றம்

அதாவது, இனி பயனர்கள் வெறும் எண்களை மட்டுமன்றி, எழுத்துக்கள், எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் ஆகியவை அடங்கிய நீண்ட பாஸ்வேர்டுகளை பயன்படுத்தலாம். 

எழுத்துகள்

வெறும் எண்கள் மட்டுமே இருந்த நிலையில், அது ஹேக்கர்களுக்கு மிகவும் சுலமாக இருந்தது. இந்த நிலையில், இந்த முறை கணக்குகளை பாதுகாக்க உதவும். 

பாதுகாப்பு

வாட்ஸ்அப் செயலியில் Settings-க்கு சென்று, Account-ல் Passkeys என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கே உங்களுக்கு ஏற்ற வகையில் பாஸ்கீ செட் செய்துக்கொள்ளலாம். 

பாஸ்கீ