20 AUG 2026
Credit: GETTY
தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா முன்னேறி வரும் அதே சூழலில், சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வங்கி அதிகாரிகளை போல பேசுவது, காவல்துறை அதிகாரிகளை போல பேசுவது உள்ளிட்ட மோசடிகள் காரணமாக பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் விதமாக புதிய சிம் கார்டு வாங்குவதற்கான விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.
இந்த புதிய விதியில் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 9 மொபைல் இணைப்புகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை ஒருவர் இந்த வரம்பை தாண்டிவிட்டார் என்றால் அவரால் புதிய சிம் கார்டு வாங்க முடியாது என்பதும் உறுதியாகியுள்ளது.
ஒருவர் ஏற்கனவே 9 மொபைல் இணைப்புகளை வைத்துள்ளார் என்றால் அவருக்கு புதிய சிம் கார்டு வழங்கப்படாது.
இந்த விதி ஆகஸ்ட் 24, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த விதியை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்.
இந்த விதியை செயல்படுத்த டிஜிட்டல் இன்டெலிஜன்ஸ் பிளாட்ஃபார்ம் என்ற அமைப்பை பயன்படுத்த தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 23, 2026 முதல் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட வரம்பை மீறிய பயனர்களின் பட்டியல் தயார் செய்யபப்டும்.
இதன் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் வரம்பை மீறிய பயனர்களை மிக எளிதாக அடையாளம் கண்டுக்கொள்ள முடியும்.