Credit: Instagram

27 october 2026

என் தாரா என் தாரா நீயே என் தாரா.. கியூட் போட்டோஸை பகிர்ந்த நஸ்ரியா!

Credit: Instagram

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக இருந்துவருபவர் நஸ்ரியா நஸீம். இவர் மலையாள சினிமாவில் பிரபலமான ஒருவர்.

மலையாள சினிமாவில் தனது சிறுவயதிலிருந்து நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருப்பவர் நஸ்ரியா.

கடந்த 2006ம் ஆண்டில் பழுங்கு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் இவர் நுழைந்திருந்தார்.

மேலும் இவருக்கு கதாநாயகியாக முதல் திரைப்படமாக அமைந்தது நேரம். இதில் நிவின் பாலியுடன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தார்.

இதன் பிறகு நேரடியாக தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்தது ராஜா ராணி. இதை அட்லீ இயக்க, ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதன் பிறகு நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா போன்ற திரைப்படங்களில் பேக் டூ பேக் தமிழில் நடித்தார்.

இதற்கு பின் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக அண்டே சுந்தரங்கி என்ற திரைப்படத்தின் மூலம் நுழைந்தார். இது இவருக்கு மாஸ் வரவேற்பை கொடுத்தது.

இந்த படத்திற்கு பின் வருடத்திற்கு ஒரு திரைப்படம் என்பதுபோல படங்களில் நஸ்ரியா நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் இவர் மீண்டும் நடித்திருக்கும் திரைப்படம்தான் சீன். இந்த படத்தில் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள இந்த படமானது, 2026ம் நவம்பர் 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.