20 August 2026

டாக்ஸிக் படத்தில் நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா?

Credit: Instagram

பான் இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நயன்தாரா. இவர் தனது 41வது வயதிலும் நாயகியாகவே நடிக்கிறார்.

மலையாளம் சினிமாவின் மூலம் திரைப்படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை நயன்தாரா. இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்துவருகிறார்கள்.

இவர் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கியிருந்தார்.

மலையாளத்தில் 2003ம் ஆண்டில் வெளியான மனசினக்கரே என்ற படத்தின் மூலமாக நடிகையாக நுழைந்தார்.

தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்தது ஐயா. 2005ம் ஆண்டில் வெளியான இந்த படத்தின் மூலமாக நாயகியாக நுழைந்தார். 

இதற்கு பின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார்.

இவருக்கு 41வது வயதாகியும், படங்களில் நாயகியாகவே நடிக்க முன்வருகிறார். வெறும் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இவர் இருக்கிறார்.

இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் தமிழ் திரையில் வெளியாக காத்திருக்கும் படம் ஹாய். இதில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் கன்னட மொழியில் யாஷுடன் டாக்ஸிக் என்ற படத்தில் அவரின் சகோதரியாகவும், அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார்.

யாஷுடன் டாக்ஸிக் படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா மொத்தம் ரூ 12 முதல் 18 கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.