Credit: Instagram
29 october 2026
Credit: Instagram
சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாகவே நடித்து, பான் இந்திய மொழிகளில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா.
சினிமாவில் நுழைவதற்கு முன், மலையாளத்தில் செய்தியாளராக தொலைக்காட்சிகளில் பணியாற்றிவந்தார் நயன்தாரா.
அதன் பிறகு மலையாளத்தில் 2003ம் ஆண்டில் வெளியாகியிருந்த மனசினக்கரே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
இந்த படத்திற்கு பின் தொடர்ந்து மலையாள மொழியில் படங்களில் நடிகையாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தார்.
தமிழில் இயக்குநர் ஹரி இயக்கத்தில், சரத்குமார் ரெட்டை வேடத்தில் நடித்திருந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக நுழைந்தார்.
இந்த திரைப்படங்களுக்கு பின் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களிலும் நாயகியாக நடித்துவந்தார்.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடனும் ஜோடியாக படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் இதுவரை டாக்ஸிக் மற்றும் ஹாய் என இரு படங்கள் வெளியான நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதன் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் இவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் போலீஸ் மற்றும் அம்மனாக நடித்துள்ளார். இப்படம் 2026 நவம்பர் 6ல் வெளியாகிறது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா சுமார் ரூ 12 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். மேலும் லாபத்திலும் பங்கு பெறுவார் என கூறப்படுகிறது.