Credit: Instagram

02 November 2026

உன்னைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. நஸ்ரியா குறித்து நயன்தாரா!

Credit: Instagram

தென்னிந்திய நட்சத்திர நடிகர்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் நயன்தாரா.

இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய மொழிகளில் படங்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.

மலையாள சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி தற்போது, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக இருக்கிறார்.

ஆரம்பகாலகட்டத்தில் மலையாளத்தில் செய்தி வாசிப்பாளராக திரையில் தோன்றிய இவர், பின் சினிமா பக்கம் சென்றிருந்தார்.

தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக, இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பின் தமிழில் விஜய் முதல் சூர்யா வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமானார்.

தற்போது நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நாயகியாகவே தனது பணியை தொடங்கிவருகிறார்.

இவரும் நடிகை நஸ்ரியா இருவருமே அட்லீயின் இயக்கத்தில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இவர்கள் இருவரின் நட்பும் பிரியாமல் தற்போதுவரை சிறப்பாக இருந்துவரும் நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் நஸ்ரியா வருவது குறித்து பேசியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், திரையில் உன்னைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் பேபி.. என சீன் படம் குறித்து பேசியுள்ளார்.