02 Feb 2025
Credit: Instagram
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மிருணாள் தாக்கூர்
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானார்.
தொடர்ந்து ஹிந்தி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
நானிக்கு ஜோடியாக ஹை நானா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தி ஃபேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
காதல் என்றால் உங்களைப் பொறுத்தவரை என்ன என்ற கேள்விக்கு மிருணாள் தாக்கூர் பதிலளித்துள்ளார்.
"காதல் என்பது மிக அழகான உணர்வு. பூமியில் உள்ள அனைவருக்கும் ஏற்படும்.
அது உங்களை மேம்பட்ட நபராக மாற்றும். எல்லோருக்கு இதுபோன்ற காதல் அமைய வேண்டும்.
காதலில் மிக முக்கியமானது ஒருவரை அப்படியே ஏற்றுக்கொள்வது
காலம் எவ்வளவு மாறினாலும் காதல் மாறது. நீங்கள் காதல் வயப்பட்டால் அவர்களிடம் சரணடையுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.