01 Feb 2025
Credit: Instagram
கைதி படத்தில் நடிகர் கார்த்தியின் மகளாக நடித்து பிரபலமானவர் மோனிகா.
சமீபத்தில் கடந்த 2016 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டது.
அதில் குழந்தை நட்சத்திரம் பிரிவில் தனக்கு விருது கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் நான் 5 வயதில் இருந்து வடித்து வருகிறேன்.
2016 முதல் 2022 வரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். கைதி, கனா ராட்சசன் உள்ளிட்ட முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடித்திருக்கிறேன்.
அந்தக் காலகட்டத்தில் என்னைப் போலவே பல குழந்தை நடிகர்கள் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர்.
'அவர்களில் யாருக்காவது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால், அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்'
யாரோ ஒருவரின் பரிந்துரையால் வழங்கப்படும் விருது இல்லை. இது அரசால் வழங்கப்படும் விருது.
விருது என்பது ஒருவரின் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம்
இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கும்போது விருதுகள் மீதான மரியாதை குறைகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.