15 AUG 2025

குழந்தை காப்பகமா? மன குழப்பமா?பெற்றோர்க்கான தீர்வுகள்!

Credit: GETTY

பணிபுரியும் பெற்றோருக்குக் குழந்தைகளைப் பராமரிக்க பகல்நேரப் பராமரிப்பு மையங்கள் (Daycare) இன்றியமையாத தேவையாக மாறியுள்ளன.

வேலை

மையங்களில் குழந்தைகள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் பற்றிய செய்திகள் பெற்றோரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

அச்சம்

கூட்டுக்குடும்ப முறை குறைந்து தனிக்குடும்பங்கள் அதிகரித்ததால் முதியவர்களின் அரவணைப்பு குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.

சவால்

நம்பகமான மற்றும் பாதுகாப்பான மையங்களைக் கண்டறிவது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

நம்பிக்கை

நேரலை சிசிடிவி (CCTV) வசதி இல்லாத மையங்கள் மீது பெற்றோர்களுக்குப் போதிய நம்பிக்கை ஏற்படுவதில்லை.கேமராக்கள் மட்டுமே குழந்தைகளின் முழுமையான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை.

கண்காணிப்பு

போதிய பயிற்சியற்ற ஊழியர்களால் குழந்தைகளுக்குத் தேவையில்லாத ஆபத்துகள் மற்றும் மன உளைச்சல்கள் நேரலாம்.

பயிற்சி

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பராமரிப்பு மையங்களுக்கு கடுமையான விதிகளை வரையறுக்க வேண்டும்.

விதிகள்

அலுவலக வளாகத்திலேயே குழந்தை பராமரிப்பு மையங்களை அமைத்துத் தருவது ஊழியர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

நிறுவனங்கள்

குழந்தையின் பாதுகாப்பு குறித்த தொடர் சிந்தனைகள் பணிபுரியும் பெற்றோரின் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

சுமை

சிறிய எள் விதைகளில் பாலில் உள்ளதை விட மிக அதிகளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

விழிப்புணர்வு