13 Jan 2025
Credit: Freepik
எடை குறைப்பு மருந்துகள் மற்றும் ஊசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது
இந்த மருந்தை நிறுத்திய பிறகு, எடை மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்குகிறது.
ஆராய்ச்சியின்படி, மருந்தை நிறுத்திய 1-2 ஆண்டுகளுக்குள் எடை அதன் பழைய நிலைக்கு திரும்பும்.
மருந்தை நிறுத்திய பிறகு, மாதத்திற்கு சராசரியாக 1 கிலோ எடை அதிகரிக்கலாம்.
மருந்தை நிறுத்துவது பசியை அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது.
எடையுடன் சேர்ந்து சர்க்கரை அளவும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கலாம்.
மக்கள் பெரும்பாலும் மருந்தை மட்டும் நம்புகிறார்கள். உடற்பயிற்சி செய்வது கிடையாது.
உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் உடல் பருமனுக்கு நிரந்தர தீர்வை தராது.
மருந்துகளுடன் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை செய்வது அவசியம்.
உடல் எடையை கட்டுப்பாடுடன் வைக்க, உடற்பயிற்சியும், சரிவிகித உணவும் முக்கியமானது.