18 Jan 2026
Credit: Freepik
நம் உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கு நீரேற்றம் (Hydration) மிக அவசியம் ஆகும்.
உடலில் நீர்சத்தை பேணுவதற்கும், நீரேற்றமாக இருப்பதற்கும் தண்ணீர் தான் பலரும் பருகுவோம்.
ஆனால், தண்ணீரை விட பால் தான் நீர்ச்சத்தை பேணுவதற்கு சிறந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா?
உடல் சீராகச் செயல்படுவதற்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் பாலில் நிறைந்துள்ளன
பாலில் உள்ள இயற்கையான சர்க்கரைகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள், வயிற்றில் இருந்து உணவு வெளியேறும் செயல்முறையை மெதுவாக்குகின்றன.
குறிப்பாக பால் திரவங்கள் நம் உடலில் நீண்ட நேரம் தங்கியிருக்க அனுமதித்து, சிறுநீர் உற்பத்தியைக் குறைக்கிறது.
அதோடு, தண்ணீரை விட பால் தான், நம் உடலில் நீரேற்றத்தைப் பராமரிக்க உதவுகிறது.
குறிப்பாக பால், நாம் உடற்பயிற்சி செய்த பிறகு உடலில் திரவ சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது
நீண்ட நேர நீரேற்றம் மற்றும் சக்தி தேவைப்படும் நேரங்களில் பால் சிறந்தது.
ஆனால், தாகம் தீர்க்கவும், தினசரி நீரேற்றத்திற்கும் தண்ணீர் மட்டுமே சிறந்தது.