07 Jan 2026

இந்த 2 ஹீரோக்கள் தான் எனக்கு பிடிக்கும் - மீனாட்சி சௌத்ரி 

Credit: Social Media

தமிழில் விஜய்யின் தி கோட் படம் மூலம் பிரபலமானவர் மீனாட்சி சௌத்ரி. 

இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்தார்.

அவர் பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரவி தேஜாவின் கில்லாடி, அதிவி சேஷின் ஹிட் போன்ற படங்களின் மூலம் தெலுங்கில் பிரபலமானார்.

தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை, ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் உருவான லக்கி பாஸ்கர் வெற்றிபெற்று அவருக்கு நல்ல புகழைக் கொடுத்தது.

தற்போது நவீன் பொலிசெட்டியுடன் இணைந்து அனகனக ஒக ராஜூ என்ற படத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட அவர் தனக்கு பிடித்த 2 நடிகர்கள் குறித்து பேசியுள்ளார். 

அதில் தனக்கு பிரபாஸின் நடிப்பு பிடிக்கும் என்றார். 

மேலும் அல்லு அர்ஜூனின் நடனம் தனக்கு பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.