29 May 2025

இஞ்சியின் மருத்துவக் குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்!

Credit: Getty

இஞ்சி நம் உடலின் செரிமான மண்டலத்தை வலுவடையச் செய்து ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஜீரணம்

ஆயுர்வேத மருத்துவத்தில் சுவாசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இஞ்சி மிக முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது. இது நுரையீரலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

சுவாசம்

கை, கால் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் நாள்பட்ட மூட்டு வலிகளுக்கு இஞ்சி சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

வலி

சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க இஞ்சி பெரிதும் உதவுகிறது.

சர்க்கரை

தினமும் காலையில் இஞ்சியை உட்கொள்வதன் மூலம் நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது. இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளைத் தடுக்கும்.

இரத்தம்

சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து நெற்றியில் தடவினால் தீராத ஒற்றைத் தலைவலி குணமாகும்.

தலைவலி 

நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு அவதிப்படுபவர்கள் இஞ்சித் தண்ணீரைத் தயாரித்துக் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

சளி

சளி மற்றும் விடாத இருமல் போன்ற சுவாசக் குழாய் சார்ந்த பிரச்சினைகளுக்கு இஞ்சி நல்ல மருந்தாகும்.

இருமல்

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கின்றன.

எதிர்ப்பு சக்தி 

இஞ்சியானது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

எடைக்குறைப்பு