22 Nov 2026

கத்திரிக்காய் கசக்காமல் சமைக்கணுமா?  உப்பு ரகசியம்!

Credit: Unsplash

கத்திரிக்காய் பொரியல், குழம்பு அல்லது வறுவல் செய்யும்போது சில நேரங்களில் கசப்புச் சுவை ஏற்படலாம். இதனால் உணவின் ஒட்டுமொத்த சுவையும் மாறிவிடும்.

கசப்பு

கத்திரிக்காயில் இயற்கையாகவே ஸ்டீராய்டல் கிளைகோஆல்கலாய்டுகள் மற்றும் சப்போனின்கள் போன்ற சேர்மங்கள் உள்ளன. இவை கத்திரிக்காயின் கசப்பு சுவைக்கு காரணமாக இருக்கலாம்.

காரணம்

கத்திரிக்காய் வாங்கும்போது பளபளப்பான தோல் கொண்டவற்றை தேர்வு செய்ய வேண்டும். முற்றிய அல்லது நீண்ட நாட்கள் சேமிக்கப்பட்ட கத்திரிக்காயில் கசப்பு அதிகமாக இருக்கலாம்.

தேர்வு

கத்திரிக்காயின் கசப்பை குறைக்க உப்பைப் பயன்படுத்தலாம் என மாஸ்டர்செஃப் பங்கஜ் பதௌரியா தெரிவித்துள்ளார். இந்த எளிய முறையை வீட்டிலேயே பின்பற்ற முடியும்.

எளிய ட்ரிக்

முதலில் சமைக்க தேவையான கத்திரிக்காயைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி கொள்ள வேண்டும். அதன் பிறகு கத்திரிக்காயின் காம்பு பகுதியை நீக்க வேண்டும்.

சுத்தம்

காம்பை நீக்கிய கத்திரிக்காயைத் தேவையான அளவில் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரே அளவில் நறுக்குவது உப்பு சீராகப் பட உதவும்.

நறுக்குதல்

நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளின் மீது சிறிதளவு உப்பை தூவ வேண்டும். அனைத்து துண்டுகளிலும் உப்பு படும்படி மெதுவாகக் கலந்து கொள்ள வேண்டும்.

உப்பு

உப்பு சேர்த்த கத்திரிக்காயை சில நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். அப்போது அதன் மேற்பரப்பில் சிறிய நீர்த்துளிகள் உருவாகும்; இந்தச் செயல்முறை 'Sweating' எனப்படுகிறது.

காத்திருத்தல்

சில நிமிடங்களுக்கு பிறகு கத்திரிக்காய் துண்டுகளை தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். பின்னர் சுத்தமான துணி அல்லது பேப்பர் டவல் கொண்டு ஈரப்பதத்தை துடைக்க வேண்டும்.

கழுவுதல்

உப்பு சேர்க்கும்போது சவ்வூடுபரவல் மூலம் கத்திரிக்காயில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறுகிறது. இதனால் கசப்பு சேர்மங்களும் வெளியேற வாய்ப்புள்ளது.

செயல்முறை