12 Feb 2025 

புற்றுநோய் அனுபவம் குறித்து மனம் திறந்த மம்தா

Credit: Instagram

விஷாலுக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ்.

தமிழில் குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த மகாராஜா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சன் டிவியில் ஒளிபரப்பான கையில் ஒரு கோடி என்ற தொடரை அவர் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

மம்தா மோகன் தாஸ் அடிப்படையில் பாடகரும் கூட.

சிம்புவின் காளை படத்திலும், விஜய்யின் வில்லு படத்தில் டேடி மம்மி பாடலையும் பாடியிருக்கிறார்.

மேலும் கோவா படத்தில் இடை வழி என்ற பாடலையும் இவர் பாடியிருக்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்தா அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

அந்த நேரத்தில் நடந்த துயரமான சம்பவங்கள் குறித்து அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அதில், எனக்கு 24 வயதில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

என்னை கவனித்துக்கொண்ட நர்ஸ்களிடம் ஒரு குறைந்தபட்சம் சிறிய புன்னகையாவது வெளிப்படுத்துங்கள் என்று கேட்டேன் என்றார்.