Credit: Instagram
175 November 2026
Credit: Instagram
தென்னிந்திய திரையுலகில் நடிகர்களே கொண்டாடும் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் மெகாஸ்டார் மம்முட்டி.
இவர் மலையாள சினிமாவில் முன்னணி ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்துவரும் நிலையில், தமிழிலும் படங்களில் நடித்துள்ளார்.
இவரின் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் பேரன்பு. இப்படத்தை தமிழ் இயக்குநர் ராம் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படமானது தமிழில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அதன் பிறகு மம்முட்டி தொடர்ந்து மலையாள சினிமாவிலே கதாநாயகனாக படங்களில் நடிக்க தொடங்கி பல ஹிட் படங்களை கொடுத்துவந்தார்.
ஒரு பிரம்மாண்ட நடிகராக படங்களில் பணியாற்றிவரும் மம்முட்டி, படங்களில் வெறும் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார்.
இறுதியாக மலையாளத்தில் அறிமுக இயக்குநர் ஜிதின் கே ஜோஸ் இயக்கத்தில், களம் காவல் படத்தில் சைக்கோ கொலையாளியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மம்முட்டி மீண்டும் தமிழில் நடித்திருக்கும் புதிய திரைப்படம்தான் ஓ.எம்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்க, மம்முட்டி மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த ஓ.எம் படத்தில் கார்த்திகேயன் என்ற கேங்ஸ்டாராக நடிப்பதற்கு, நடிகர் மம்முட்டி ரூ 24 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளாராம்.