22 October 2026

அது ஒரு குத்தமா? நெட்டிசன்களால் கடுப்பான மமிதா பைஜூ

Credit: Instagram

மலையாள சினிமாவில் நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை மமிதா பைஜூ.

இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மலையாள சினிமாவில் பிரேமலு படத்தின் வெளியீட்டிற்கு பிறகு மற்ற மொழிப் படங்களில் நடிக்கத் தொடங்கினார் மமிதா பைஜூ.

குறிப்பாக மலையாள சினிமாவிற்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார் நடிகை மமிதா பைஜூ.

தமிழ் சினிமாவில் இதுவரை டியூட், கர, ஜன நாயகன் மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என வரிசையாக படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இதுவரை 3 படங்கள் தமிழ் மொழியில் வெளியாகி உள்ளது.

மேலும் படங்கள் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் ஒரு புதிய காரை வாங்கியிருந்தார்.

மமிதா  அவர் இளம் வயதிலேயே சொகுசு கார் வாங்கியது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமரிசனங்களும் விவாதங்களும் எழுந்தன.

புது கார் வாங்கியது குற்றமா? கடினமாக உழையுங்கள் நீங்கள் என்னைவிட பெரிய கார் கூட வாங்கலாம் என்று மமிதா தெரிவித்துள்ளார்.