Credit: Instagram
11 November 2026
Credit: Instagram
மலையாள திரையுலகின் மூலமாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா மக்கள் மத்தியில் பிரபலமான இளம் நடிகராக இருப்பவர் நஸ்லென்.
இவர் மலையாள மொழியில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பிரேமலு என்ற திரைப்படத்தின் மூலம் சவுத் இந்திய முழுவது பிரபலமானார்.
ஆனால் இவர் கடந்த 2019ம் ஆண்டில் மதுர ராஜா என்ற மலையாள திரைப்படத்தில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார்.
அதன் பிறகு தண்ணீர் மதன் தினங்கள் என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து, சினிமாவில் பிரபலமானவரானார்.
இந்த திரைப்படங்களுக்கு பிறகு பேக் டூ பேக் திரைப்படங்களில் முக்கியமான வேடம் மற்றும் துணை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் ஹீரோவாகவும் தொடர்ந்து நடிக்க தொடங்கியிருந்த நிலையில், இவருக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் கொடுத்த திரைப்படம் பிரேமலு.
2024ம் ஆண்டில் இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் வெளியன் இப்படத்தில், சச்சின் என்ற வேடத்தில் நடித்து பேமஸானார்.
இப்படத்தின் நடிகை மமிதா பைஜூவுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் பிரபலம் கிடைத்தது.
இந்த வரிசையில் தற்போது இவர் தமிழ் சினிமாவிலும், சூர்யாவின் சீன் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் நஸ்லென், தனது கைவசத்தில் பேச்சுலர் பார்ட்டி D'EUX, டிக்கி டக்கா மற்றும் மட்டஞ்சேரி மாஃபியா போன்ற படங்களை வைத்துள்ளார்.