02 April 2025 

தனிமை என்னை உலுக்கியது - மாளவிகா மோகன் உருக்கம்

Credit: Instagram

நடிகை மாளவிகா மோகனன் தற்போது தியாகராஜன் குமாரராஜாவின் பாக்கெட் நாவல் படத்தில் நடித்து வருகிறார். 

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் தியாகராஜன் குமாரராஜா படத்தில் வேலை செய்தது சிறந்த அனுபவம்.

அவர் கதை சொல்லும் விதம், ஒரு நடிகரை வழி நடத்தும் விதம் எல்லாம் சிறப்பான அனுபவமாக இருந்தது. 

இந்த மாதம் முழுவதும் பெரும்பாலும் சென்னையில் தான் படப்பிடிப்பு இருந்தது.

வேலை அழகாக இருந்தாலும் வீட்டில் இருந்து பிரிந்து இருந்தது கடினமாக இருந்தது.

படிப்பிடிப்புக்கு பிறகு அறையில் தனிமையை மிக அதிகமாக உணர்ந்தேன். தனிமை என்னை உலுக்கியது.

என் குடும்பம் சில நாட்களுக்கு என்னை பார்க்க வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

சென்னையிலும் மாமல்லபுரத்திலும் அழகான இடங்களை பார்த்தோம்.  சென்னை உணவுகளை முயற்சித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது என்றார்.