23 Jan 2025

'சில நடிகைகளுக்கு சோகமாக நடிக்கத் தெரியாது'

Credit: Instagram

கார்த்திக் சுப்பராஜின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

அந்தப் படத்தில் சிறிய வேடம் என்றாலும் ரசிகர்களிடையே மிகவும் கவனம் ஈர்த்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த மாஸ்டர் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

தனுஷின் மாறன், பா.ரஞ்சித்தின் தங்கலான் படங்களில் அவர் நடித்தார். 

இந்த பொங்கலை முன்னிட்டு வெளியான பிரபாஸின் தி ராஜா சாப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திரு்தார்.

மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்திருந்த ஹிருதயபூர்வம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிப்பு குறித்து மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சில நடிகைகள் சோகமான காட்சிகளில் வசனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றார்.

'சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒன், டு, த்ரீ , ஃபோர் என சொல்கிறார்கள்'

'ஏ,பி,சி,டி என சொல்லியபடி முகத்தை கோபமாக வைத்துக்கொள்கிறார்கள்'