03 July 2026

பிகினி அணிவதில் என்ன தவறு இருக்கிறது? - மாளவிகா மோகனன்!

Credit: Instagram

மலையாளம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து, தென்னிந்திய மொழிகளை நாயகியாக ஆட்டிப்படைப்பவர் மாளவிகா மோகனன்.

இவரின் நடிப்பில் இறுதியாக தி ராஜா சாப் என்ற படம் வெளியானது. இதில் பிரபாஸிற்கு ஜோடியாக நடித்து அசத்தினார். 

தி ராஜா சாப் படத்தின் மூலமாக தெலுங்கி நாயகியாக அறிமுகமான நிலையில், தற்போது தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது.

தமிழில் இவர் ரஜினியின் பேட்ட (2019) என்ற படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

பின் தனது 2வது தமிழ் படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியானார். அந்த திரைப்படம்தான் மாஸ்டர்.

மேலும் 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் படம் சர்தார் 2. இதில் கார்த்தியுடன் இணைந்து ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார்.

மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்வது வழக்கம்.

சமீபத்தில் பிகினி உடையணிந்து போட்டோக்களை வெளியிட்ட மாளவிகா மோகனுக்கு, பல நெகடிவ் விமர்சனங்கள் வந்தது. அதை விளக்கியுள்ளார்.

அவர், பிகினி உடையணிவதில் என்ன தவறு. வெளிநாடுகளில் அது சாதாரணமான விஷயம். 

எல்லை மீறாத கவர்ச்சி எது என்பது நடிகைகளுக்கு தெரியும், யாரையும் எளிதாக விமர்சிக்காதீர்கள் என மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.