04 Jan 2026
Credit: Social Media
கடந்த 1993 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் மாளவிகா மோகனன்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானார் மாளவிகா மோகனன்.
முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்த நிலையில் அவருக்கு தொடர் வாய்ப்புகள் குவிந்தன.
அதனைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர், தனுஷிற்கு ஜோடியாக மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடைசியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் ஹாரத்தியாக மிரட்டினார்.
தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் 2 விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் மூலம் தெலுங்கில் களமிறங்குகிறார்.
பிரபாஸுடன் சலார் பட வாய்ப்பு நழுவியது குறித்து பேசிய அவர், சில காரணங்களால் அந்த வட வாய்ப்பு கடைசி நேரத்தில் பறிபோனது.
இப்போது மீண்டும் தி ராஜா சாப் படத்தில் நடிப்பதற்கு விதி தான் காரணம் என்றும் பேசினார்.
தி ராஜா சாப் திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 அன்று திரைக்கவரவிருக்கிறது.