17 SEP 2026
Credit: Getty
தங்கத்தை போலவே சற்று விலை உயர்ந்த உலோகமாக வெள்ளி உள்ளது. ஆனால், தங்கத்தின் அளவுக்கு அதிக லாபம் தரக்கூடிய உலோகம் அல்ல.
தங்கம் ஒரு கிராம் ரூ.14,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வெள்ளி சிறந்த லாபத்தையே கொடுத்துள்ளது.
இருப்பினும் வெள்ளி நிலையற்ற தன்மையை கொண்டு இருக்காது என்பதன் காரணமாக அதில் முதலீடு செய்ய பலருக்கும் தயக்கம் இருக்கும்.
வெள்ளி முதலீடு எதிர்காலத்திற்கு சிறந்த பாதுகாப்பை தருவதாக இருந்தாலும், முதலீடு செய்வதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.
செய்கூலி இல்லாத வெள்ளி நாணயங்களை வாங்குங்கள். இது நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு சிறந்த லாபத்தை கொடுக்கும்.
வெள்ளியை நகையாக வாங்குவதை தவிர்க்க வேண்டும். காரணம், அதற்கு அதிக செய்கூலி, சேதாரம் செலுத்த வேண்டும்.
வெள்ளியில் முதலீடு செய்ய டிஜிட்டல் வெள்ளியை தேர்வு செய்யலாம். இதற்கு சேமிப்பு கட்டணங்கள் எதுவும் இல்லை என்பதால் நல்ல லாபம் கிடைக்கும்.
வெள்ளியின் விலையை தினசரி கவனியுங்கள். வெள்ளி விலை குறையும்போது முதலீடு செய்து, அதிகரிக்கும்போது விற்பனை செய்யுங்கள்.
வெள்ளியை வாங்குவதற்கு முன்னதாக அது தூய்மையான வெள்ளி தானா என்பதை உறுதி செய்ய ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.