Credit: Instagram

04 october 2026

AA23 படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் இவ்வளவா?

Credit: Instagram

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் பல படங்கள் உருவாகியுள்ளது.

தமிழில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தார். இதுவே இவருக்கு முதல் படம்.

இந்த படத்தை லோகேஷ் இயக்க, ஸ்ரீ, சந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு பின் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி படத்தை இயக்கியிருந்தார். இது இவருக்கு சிறப்பான வரவேற்ப்பை கொடுத்தது.

இதன் பிறகு லோகேஷ் இயக்கிய மிக பிரம்மாண்டமான திரைப்படம்தான் மாஸ்டர். இதில் முதல்வர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்தனர்.

இதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் இயக்குநராக பல படங்களில் பணியாற்றிய நிலையில், தற்போது ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். அவர் நடித்த முதல் படம்தான் டிசி.

டிசி படமானது லோகேஷ் கனகராஜுக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்த நிலையில், தற்போது அல்லு அர்ஜுனின் AA23 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷனில் உள்ளார்.

அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க லோகேஷ் கனகராஜ் இதை இயக்குகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் இயக்குநராக பணியாற்றுவதற்கு ரூ 75 கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளாராம், இதுபோக இப்படத்தின் லாபத்திலும் பங்குபெறுவாராம்.