Credit: Instagram

21  September 2026

ராஷ்மிகாவின் கைவசம் உள்ள புதிய திரைப்படங்கள் என்னென்ன?

Credit: Instagram

பான் இந்திய சினிமாவில் அனைவராலும், உச்ச நடிகையாக அறியப்படும் நாயகியாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா.

கன்னட மொழி சினிமாவின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்த இவருக்கு முதல் படமாக அமைந்தது, கிரீக் பார்ட்டி.

ராஷ்மிகாவின் இந்த திரைப்படத்தை பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பின் இவருக்கு பான் இந்திய சினிமாவில் நடிகையாக அங்கீகாரம் கொடுத்த திரைப்படம்தான் கீதா கோவிந்தம்.

இதற்கு முன் சலோ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார், இதுவே தெலுங்கில் இவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு தமிழில் சுல்தான் என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து, தமிழில் நுழைந்தார். பின் விஜய்யின் வாரிசு படத்திலும் நடித்தார்.

இதையடுத்து இவருக்கு தமிழில் இவருக்குப் பெரிதாக படங்கள் எதுவும் அமையவில்லை என சொல்லலாம். ஆனால் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

தற்போது இவர் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும்  படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதில் இவருக்கு வரவேற்பை கொடுத்த படம் தி கேர்ள்ஃ பிரண்ட்.

இதையடுத்து இவர் மைசா என்ற ஆக்ஷன் அதிரடி படத்தில் நடிக்கிறார். இதை இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார்.

மேலும் இவரின் கைவசத்தில் தற்போது மைசா, ரணபாலி மற்றும் ராக்கா போன்ற திரைப்படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.