Credit: Instagram

18  November 2026

பர்த்டே கேர்ள்.. நயன்தாரா கைவசம் உள்ள படங்கள் என்னென்ன?

Credit: Instagram

தென்னிந்திய திரையுலகையும் கடந்து, பான் இந்திய மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நயன்தாரா.

மலையாளத்தில் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சி மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியிருந்தார்.

அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் கொண்ட இவர், மலையாளத்தில் படங்களில் சிறு சிறு வேடத்தில் நடிக்க தொடங்கினார்.

அதன் பிறகு மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வர எண்ணிய இவர், ஹரியின் இயக்கத்தில் ஐயா படத்தின் மூலம் தமிழில் நுழைந்தார்.

இதன் பிறகு இவருக்கு தமிழிலும் பேக் டூ பேக் பிரம்மாண்ட இயக்குநர்களுடன் படங்களில் இணையும் வாய்ப்புகள் கிடைத்தது.

இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் முதல் சூர்யா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் இந்தி சினிமாவில் ஷாருக்கான் முதல் சல்மான் கான் போன்ற நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் மட்டும், டாக்ஸிக், ஹாய் திரைப்படம் மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 என 3 படங்கள் வெளியாகியுள்ளது.

அதிலும் மூக்குத்தி அம்மன் 2 படமானது சுமார் ரூ 100 கோடி பொருட்செலவில் வெளியான நிலையில், ஓரளவு வரவேற்கப்பட்டது.

மேலும் நடிகை நயன்தாரா தனது கைவசத்தில், சல்மான் கானுடன் SVC63,  தர்மன், ராக்காயி, மண்ணாங்கட்டி மற்றும் டியர் ஸ்டூடன்ட்ஸ் போன்ற படங்களை வைத்துள்ளார்.