Credit: Instagram

28 September 2026

சந்தீப் கிஷன் கைவசத்தில் இருக்கும் படங்கள் என்னென்ன ?

Credit: Instagram

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நடிகர் சந்தீப் கிஷன். இவர் தமிழிலும் பிரபலமானவர்.

சந்தீப் கிஷன் கடந்த 2010ம் ஆண்டிலே தெலுங்கு சினிமாவில் பிரசாதனம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக நுழைந்தார்.

இந்த படத்திற்கு பின் ஷோர் இந்த தி சிட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் நடித்திருந்தார்.

அந்த விதத்தில் தமிழில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது யாருடா மகேஷ், இதை இயக்குநர் ஆர். மதன் இயக்கியிருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு பின் தமிழில் மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் என பல தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தார்.

மேலும் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ராயன். இதை தனுஷ் இயக்கி நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பின் இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் சிக்மா. இந்த படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக இப்படத்தின் மூலமாக அறிமுகமான நிலையில், சந்தீப் கிஷனுக்கு இது வெற்றியாக அமையும் என கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு பின் இவரின் நடிப்பில் பல படங்கள் உருவாகிவருகிறதாம். அது எந்தெந்த இயக்குநர்களுடன் என தெரியுமா?

இவரின் நடிப்பில் மாயவன், இயக்குநர் உகந்தர் முனி இயக்கத்தில் கரிகாலர் என்ற திரைப்படம். இந்த படங்கள் இவரின் கைவசத்தில் உள்ளது.