Credit: Instagram

22  September 2026

பிரீத்தி முகுந்தன் கைவசம் உள்ள படங்கள் லிஸ்ட்!

Credit: Instagram

மாடலிங் முதல் தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது தென்னிந்திய மொழிகளில் லீட் நாயகியாக படங்களில் நடிப்பவர்தான் பிரீத்தி முகுந்தன்.

கடந்த 2001ம் ஆண்டில் ஜூலை 30ம் தேதியில் தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளியில் நடிகை பிரீத்தி முகுந்தன் பிறந்தார்.

தனது சிறுவயதை சாதாரணமான குழந்தையாக கழித்த இவர், பின் மாடலிங் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆரம்பகாலங்களில் கடை விளம்பரங்கள், சினிமாவில் மற்றும் மாடலிங் தொழில் தனது ஆர்வத்தை முழுவதுமாக காட்டிவந்தார்.

பிறகு 2022ம் ஆண்டில் டீஜெய் அருணாசலம் பாடிய முட்டு முட்டு 2 என்ற ஆல்பம் பாடலில் நடனமாடி திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன் பிறகு 2024ம் ஆண்டில் சாய் அப்யங்கரின் இசையமைப்பில் வெளியான ஆச கூட பாடலிலும் சிறப்பாக நடனமாடி பேமஸானார்.

இதே சமயத்தில் தெலுங்கில் ஓம் பீம் புஷ் என்ற படத்தின் மூலம் முதல் முதலாக சினிமாவில் நடிகையாக நுழைந்தார்.

மேலும் தமிழில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது ஸ்டார். இதில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதன் பிறகு இந்த 2026ம் ஆண்டில் மட்டுமே பிளாஸ்ட் மற்றும் இதயம் முரளி என ஹிட் படங்களை கொடுத்து இளம் நாயகியாக வளம் வருகிறார்.

மேலும் இவரின் கைவசத்தில் எமோ எமோ இதி, அன்பில் அவன், தாஷமக்கான், நாக ஜில்லா மற்றும் தனுஷின் 56வது போன்ற படங்களை வைத்துள்ளார்.