Credit: Instagram
27 September 2026
Credit: Instagram
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கயாடு லோஹர்.
இவர் பிறப்பால் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்ற நிலையில், வளர்ந்தது முழுவதும் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் வளர்ந்திருந்தார்.
ஆரம்பத்தில் மாடலிங் மீது ஆர்வம் கொண்ட இவர், பின் சிறு சிறு விளம்பரங்களிலும் நடித்து திரையில் பிரபலமானார்.
பின் இவருக்கு நடிகையாக முதல் திரைப்படமாக அமைந்தது முகுகில்பேட். கன்னட மொழியில் வெளியான இப்படத்தை இயக்குநர் பரத் எஸ் நவுடா இயக்கியிருந்தார்.
மேலும் 2022ம் ஆண்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற படத்தின் மூலம் மலையாளம் சினிமாவில் நுழைந்தார். இது தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது டிராகன், இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுவே இவருக்கு பிரபலத்தை கொடுத்தது.
இதன் பிறகு இவருக்கு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார்.
இறுதியாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் இம்மாட்டல். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்தார்.
மேலும் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி பாரடைஸ். இதில் சுப்பு என்ற வேடத்தில் நடித்திருந்தார்.
நடிகை கயாடு லோஹர் தற்போது, மஞ்சணத்தி, சூர்யா48, தாரம் மற்றும் SK27 போன்ற படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார்.