Credit: Instagram

19 october 2026

நடிகை மமிதா பைஜூவின் கைவசம் உள்ள புதிய படங்கள்??

Credit: Instagram

மலையாளம் சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானவர் மமிதா பைஜூ.

கிளாசிக் டான்ஸரான இவர் ஆரம்பத்தில் விளம்பரங்களில் மாடலிங் மற்றும் நடன அரங்கேற்றம் போன்ற  பணிகளை செய்துவந்தார்.

இவரின் கிளாசிக் டான்ஸ் புகைப்படம் பத்திரிகையில் வெளியாகி, இவருக்கு முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது.

மமிதா பைஜூ மலையாளத்தில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான சர்வோபரி பாலக்காரன் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தார்.

இந்த படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் அங்கீகரிக்கப்படாத மற்றும் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார் நடிகை மமிதா பைஜூ.

மலையாளத்தில் தொடர்ந்து படங்களில் நடித்துவந்தாலும், இவருக்கு சிறப்பான பிரபலத்தை கொடுத்த படம் சூப்பர் சரண்யா.

இந்த படத்திற்கு இவர் முன்னணி நாயகியாக அறிமுகமான திரைப்படம் பிரேமலு. இதில் நடிகர் நஸ்லெனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் தமிழில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ரெபெல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தற்போது இவர் தளபதி விஜய் முதல் சூர்யா உள்ளிட்ட தென்னிந்திய உச்ச நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து, முன்னணி நாயகியாக திகழ்ந்துவருகிறார்.

மமிதா பைஜூ தனது கைவசத்தில், தமிழில் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் ஒரு படம், இரண்டு வானம் மற்றும் மலையாளத்தில் ஹலோ டியர் போன்ற படங்களை வைத்துள்ளார்.