24 July 2026

சாய் அபயங்கரின் கைவசம் உள்ள படங்களின் லிஸ்ட்!

Credit: Instagram

ஒரே பாடலின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றவர் சாய் அபயங்கர்.

2024ம் ஆண்டில் கட்சி சேர என்ற பாடலின் மூலம் நுழைந்த இவர், சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். 

தொடர்ந்து ஆல்பம் பாடல்களின் மூலம் மக்கள் பிரபலத்தை பிடித்த இவர், மலையாளம் சினிமாவின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்தார்.

ஆனால் அதற்கு முன், லோகேஷ் கனகராஜின் பென்ஸ் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். 

பின் இவருக்கு தமிழில் சூப்பர் ஹிட் வரவேற்பை கொடுத்த படம் டியூட் (2025).

இப்படத்தின் வெற்றியை அடுத்து கருப்பு படத்திலும் தனது பாடல்களின் மூலம் அசத்தியிருந்தார்.

தற்போது தென்னிந்திய முக்கிய நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைக்கும் நிலையில், அது பற்றி பார்க்கலாம் 

கருப்பு படத்திற்கு பின் சூர்யாவின் 48, கார்த்தியின் மார்ஷல், அல்லு அர்ஜுனின் ராக்கா திரைப்படம்.

நடிகர் துருவ் விக்ரமின் 4வது படம், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படம், ராகவா லாரன்ஸின் பென்ஸ் திரைப்படம். 

மேலும் தனுஷின்  ஓம் மற்றும் தமிழ் முருகன் போன்ற படங்கள் என மொத்தம் 8 படங்களை கைவசம் வைத்துள்ளார்.