Credit: Instagram

25 September 2026

சாய் அபயங்கர் இசையில் உருவாகும் தனுஷ் படங்கள் என்னென்ன?

Credit: Instagram

தென்னிந்திய சினிமாவில் தற்போது இளம் இசையமைப்பாளராகவும், மக்கள் மத்தியில் நெருக்கமானவர் சாய் அபயங்கர்.

2024ம் ஆண்டின் தொடக்கத்தில் கட்சி சேர என்ற ஆல்பம் மூலமாக மக்கள் மத்தியில் தனது முதல் பிரபலத்தை பெற்றார்.

பின் அதே ஆண்டில் (2024) ஆச கூட என்ற 2வது இண்டீ பாடலை வெளியிட்டு மேலும் மக்களிடையே பிரபலமானார். இது அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது.

பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின்  தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் படம் மூலமாக இசையமைப்பாளர் என முதலில் அறிமுகம் செய்யப்பட்டார்.

ஆனால் இவரின் இசையில் தமிழில் வெளியான முதல் திரைப்படம் டியூட். இதில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு பின் மிகவும் பிரம்மாண்டமான இசையமைப்பாளராக இவருக்கு தமிழில் அந்தஸ்தை கொடுத்த படம் சூர்யாவின் கருப்பு.

இதன் பிறகு தற்போது தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய திரைப்படங்களுக்கு இசையமைப்பாளாராக பணியாற்றுகிறார்.

அதிலும் சூர்யாவின் 48 படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசையமைக்கிறார். இப்படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.

மேலும் தற்போது சூர்யா, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் பணிகளில் உள்ளார்.

இந்நிலையில் சாய் அபயங்கர் இசையமைக்கும் தனுஷ் படங்கள் என்னென்ன தெரியுமா?, ஓம், தமிழ் முருகன், மற்றும் D56 போன்ற படங்கள் ஆகும்.