02 July 2026 

நடிகைகளை கண்ணியமாக பாருங்க - கிரிதி சனோன்!

Credit: Instagram

2014ம் ஆண்டு 1: நெனோக்கடைன் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையானவர் கிரிதி சனோன்.

தற்போது இவர் முழுக்க இந்தி மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். 

தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்த படம் தேரே இஷ்க் மே. 

தேரே இஷ்க் மே படத்தில் தனுஷுடன் இணைந்து, வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். 

இவர் முழுக்க இந்தி மொழி படங்களில் கவனம் செலுத்திவரும் நிலையில், தென்னிந்திய மொழிகளிலும் வாய்ப்புகள் வருகிறது. 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  இவர், நடிகைகளை ஊடகங்களில் தவறாக சித்தரிப்பது போன்ற இழிவான விஷயம் பற்றி பேசியிருக்கிறார்.

நடிகைகளை தவறாக சித்தரிப்பது பொழுதுபோக்காகிவிட்டது. ஆடைகள் விலக்கும்போது போட்டோ எடுத்து, தவறாக யூஸ் செய்கிறார்கள்

மேலும் அவர், நடிகைகளை கண்ணியமாக பாருங்க, உங்களுக்கு திரையில் தோன்றின் மகிழ்விக்கும் எங்களை மரியாதையாக நடத்துங்கள்.

நடிகைகளின் போலி ஆபாச படங்களை வெளியிட்டு காண வேண்டுமா?. இது கேவலமாக இல்லையா?

நடிகைகள் குறித்த எதிர்மறை கருத்துக்கள் குறித்து கிரிதி சனோன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.